ஆங்கில சொற்களை தமிழாக்கம் செய்யும் வலையுலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து பெயர்ச்சொற்களை தமிழாக்கம் செய்யாதீர்கள் 
உதாரணம்:
Facebook: முகப்புத்தகம்/முகநூல்.
Firefox: நெருப்புநரி.
மிகவும் கொடுமையாக இருக்கிறது.
கண்ணாயிரம் என்பவரை EYE THOUSAND என்று கூப்பிட்டால் எப்படி அபத்தமாக இருக்குமோ அதே மாதிரி இதுவும் உள்ளது.
Microsoft Windows, Office, Android, இதையெல்லாம் ஏன் தமிழாக்கம் பண்ணாமல் விட்டு விட்டீர்கள்?
 
உதாரணம்:
Facebook: முகப்புத்தகம்/முகநூல்.
Firefox: நெருப்புநரி.
மிகவும் கொடுமையாக இருக்கிறது.
கண்ணாயிரம் என்பவரை EYE THOUSAND என்று கூப்பிட்டால் எப்படி அபத்தமாக இருக்குமோ அதே மாதிரி இதுவும் உள்ளது.
Microsoft Windows, Office, Android, இதையெல்லாம் ஏன் தமிழாக்கம் பண்ணாமல் விட்டு விட்டீர்கள்?
 
 
 
இதே கேள்வி எனக்குள்ளும் எழுந்தது.. பெயர்ச் சொற்களை மொழிப்பெயர்த்தல் அபத்தம், ஒலிபெயர்த்தலே சரி. மிகச்சரியாக ஒலிப்பெயர்க்க முடியாவிட்டால் கூட கிட்டத்தட்ட ஒலிப்பெயர்க்கலாம். உதா. பேஸ்புக்
ReplyDelete@இக்பால் செல்வன்: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteபேஸ்புக் என்று உச்சரிப்பதை விட முகநூல் என்பது நன்றாகத்தானே இருக்கிறது?அப்ப மேங்கோ என்றோ பனானா என்று பெயர்ச்சொல்லை உச்சரிப்பது சரியாக இருக்குமா?எந்த ஒரு சொல்லும் நடைமுறையில் உச்சரிப்பதைப் பொறுத்தே மொழி வளம் அமைகிறது.
ReplyDeleteஆயிரம் விளக்கை Thousand lights எனும் போது Eyes thousand கூட நன்றாகத்தானே இருக்கிறது:) ஒரு வெளிநாட்டு சுற்றுலாவாதி ஒரு வாகன ஓட்டுநருடன் பயணிக்கும் போது பெயர் என்ன என்று கேட்டால் அவர் கண்ணாயிரம் என்கிறார்.அப்படின்னா என்ன அர்த்தம்ன்னு சுற்றுலா கேட்க வாகன ஓட்டுநர் Eyes Thousand ன்னு சொன்னா வெள்ளைக்காரருக்கு புரியுமா புரியாதா?
Deleteஉங்கள் பெயரை வெள்ளைக்காரர் ஒருவர் ராஜ நடராஜன் என்று கூப்பிட்டால் சந்தோஷப்படுவீர்களா? அல்லது King WalkKing என்று கூப்பிட்டால் சந்தோஷப்படுவீர்களா? :-)
//பேஸ்புக் என்று உச்சரிப்பதை விட முகநூல் என்பது நன்றாகத்தானே இருக்கிறது?//
ReplyDeleteநல்லா தான் இருக்கு. விளக்கமும் நல்லா தான் இருக்கு.
பெயர்ச்சொற்களை மொழிபெயர்க்கூடாதுதான் ஆனால் தமிழை இங்கு மட்டும் வளர்த்துவிடுகிறோம்
ReplyDeleteமிகவும் சரியாக சொன்னீர்கள்.
Deleteஆட்டோ மொபைல்,
ReplyDeleteமனிதர்களின், நாட்டின் பெயர்களை தவிர மற்ற பெயர்களை மொழி பெயர்தால், பேஸ்புக் - முகநூல் என்பது நன்றாகத்தானே இருக்கிறது.
Michael Schumacherரின் சரியான உச்சரிப்பு மிச்சயல் சுமாக்கர். ஆனால் ஆங்கி தொலைகாட்சிககள் சில நேரம் மைக்கல் சுமாக்கர் என்று மொழிபெயர்த்து விடுகின்றன.
//மனிதர்களின், நாட்டின் பெயர்களை தவிர மற்ற பெயர்களை மொழி பெயர்தால், பேஸ்புக் - முகநூல் என்பது நன்றாகத்தானே இருக்கிறது.//
Deleteநன்றாக இருப்பது என்பது வேறு. முறைப்படி செய்வது என்பது வேறு.
//Michael Schumacherரின் சரியான உச்சரிப்பு மிச்சயல் சுமாக்கர். ஆனால் ஆங்கி தொலைகாட்சிககள் சில நேரம் மைக்கல் சுமாக்கர் என்று மொழிபெயர்த்து விடுகின்றன.//
உச்சரிப்புகள் நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம் மாறலாம். பெயர்களை மொழிமாற்றம் செய்ய வேண்டாம் என்பதுதான் கோரிக்கை.
இப்போ படத்தை பார்த்தபோ தான் தெரிந்தது நம்ம பகுத்தறிவு விஜய்யின் இணைய தளம் என்பது.
Delete//பகுத்தறிவு விஜய்//
Delete?????????????????????
பட்டம் வழங்கியதற்கு நன்றி வேகநரி அவர்களே!
கண்ணாயிரம் -Thousand Eyes. இதுதான் சரியான மொழிபெயர்ப்பு.
ReplyDeleteமன்னிக்கவும் நான் இங்கிலீஷ்ல கொஞ்சம் வீக்.
Deleteகருத்துக்கு நன்றி ஐயா!
இயற்கை பொருள்களுக்கு ஒவ்வொரு மொழியிலும் அதன் சொந்தப் பெயர் வைத்துக் கொள்வது என்பது வேறு.
ReplyDeleteவிமானம், புகைவண்டி, இணையம், கனிணி என்பது போன்ற மனிதக் கண்டுபிடிப்புகளுக்கு எம்மொழியினர் கண்டுபிடித்த பொருள்களுக்கும் தன் மொழியில் பெயர் வைத்துக் கொள்வது என்பது வேறு.
மைக்ரோசாப்ட், அடோப், பேஸ்புக், டிவிட்டர் என்பன போன்ற ஒரு நிறுவனத்தின் பிரத்தியேக பொருள்களுக்குள்ள பெயரை மாற்றி வேறு பெயர்களை தன் மொழியில் போட்டுக் கொள்வது என்பது வேறு.
கண்ணாயிரம் என்ற பெயருக்கான அர்த்தம் சொல்வது என்பது வேறு. கண்ணாயிரத்தையே ஐ தவுசன்ட் என அழைப்பது என்பது வேறு.
இன்னும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
ஆயிரம் விளக்கை தவுசன்ட் லைட் என்று அழைப்பதும், திருவல்லிக்கேணியை டிரிப்லிக்கேன் என அழைப்பதும், தூத்துக்குடியை டுட்கோரியன் என்று அழைப்பதும் ஆங்கில ஆதிக்கத்தின் விளைவும் ஆங்கில அடமைத்தனத்தின் விளைவுமாகும்.
மொழியை சரியாக புரிந்து கொள்வதும், மொழியை சரியாக பயன்படுத்துவதும், பிறமொழிகளோடு கொள்ள வேண்டிய உறவுகளை சரியாக வகுத்துக் கொள்வதும், மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுவதும், பிறரின் உரிமைகளையும், பிறரின் பொருள்களுக்கு கொடுக்க வேண்டிய அங்கீகாரத்தை முறையாக கொடுப்பதும் முக்கியம்.
இங்கே குறிப்பாக தமிழகத்தில் மொழி குறித்த நிறைய மயக்கங்களும், போலித்தனங்களும் மிகுந்துள்ளன. அவற்றின் விளைவு ஆக்கப்பூர்வமாக மொழி வளர்ச்சி குறித்த சிந்தனை இல்லை. விதண்டாவாதங்களும், நக்கல்களும், கிண்டல்களும் மலிந்துள்ளன.
YOU ARE 100% CORRECT
Deleteஎதையும் முதன் முதலில் நாம் ஒத்துக்கொள்ள மறுக்கிறோம், மொழி மாற்று கூட. Côte d'Ivoire என்கிற நாட்டின் பெயரை கூட மொழி மாற்று செய்யப்பட்டுள்ளது, Ivory Coast என்றும் Costa do Marfim என்றும். Indiaவை செருமானியர்கள் Indien என்றே அழைக்கிறார்கள். ஆகவே, இன்றைய நிலையில், மொழி மாற்று, இலக்கணம் மற்றும் பல, எதுவுமே தப்பாகாது. பெருவாரி மக்கள் பயன் படுத்த தொடங்கினால், எதுவும் சரி. 'பொறியாளன்' என்பதை 60களில் பயன்படுத்தபடவில்லை. இப்போது அது தப்பாகவும் தெரியவில்லை.
ReplyDeleteTime என்கிற சொல்லை டைம் என்றே பலுக்க வேண்டும். பெருவாரியாக டயம் என்றே பலுக்கப்படுகிறது.
விஜய்!கொஞ்சம் யோசிச்சா பெயர் காரணங்களுக்கு புராணமெல்லாம் சொல்ல வேண்டி வந்திடும் போல இருக்குதே:)
ReplyDeleteமச்சி!பேஸ்புக் ஓப்பன் பண்ணிப்பாரு!உனக்கு ஒரு குட் நியுஸ் இருக்குதுன்னு சொல்வதற்கும்
நண்பா!முகநூல் திறந்து பாரேன்! உனக்கு ஒரு நல்ல செய்தி காத்துக்கொண்டிருக்கிறது என்று சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறதுதானே?
நான் என்ன சொல்கிறேனென்றால் முதலில் முடிந்தவரை தங்கிலீஷ் தவிர்ப்போம்.அடுத்து பெயர்ச்சொற்களுக்கு மொழி மாற்றம் தேவையா இல்லையா என்று சிந்திப்போமே என்பதுதான்.மொழி எப்படி சிதைகிறது என்பதை மெட்ராஸ் என்கிற பெயரை பெயருக்கு! சிங்கார சென்னை நரகம் என மாற்றிவிட்டு அங்காடிப் பெயர்ப் பலகைகள் சென்னையில் எப்படி எழுதியிருக்கிறதென பார்த்தால் புரிந்து விடும்.
@பெங்களூர் இரவிச்சந்திரனா?ரவிச்சந்திரனா? இப்படியும் கேட்டுகிட்டே போகலாம்:)கடந்த கால இயக்கமான,தற்போதைய சங்கரமடமாகிப் போன தி.மு.க பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும் கூட தமிழுக்கு புது சொற்களைக் கொண்டு வந்ததில் தி.மு.க ஆட்சிக்கு மிகவும் பங்குண்டு.உதாரணத்துக்கு நீங்கள் சொல்லும் பொறியாளன்.பலுக்க என்பது கொஞ்சம் கிண்டலுக்கு மாதிரியாக இருந்தாலும் சொற்பிரயோகத்தில் பழகிவிடும்.எனவே சொற்பிரயோகங்களை உபயோகிப்போம்.
வேகநரி! சுமாக்கர் சரியான உச்சரிப்பு அறிமுகத்துக்கு நன்றி.ஆனால் முதற்பெயர் மிச்சயல் அல்லது மிச்சல்?அதே ஆங்கில எழுத்துக்கொண்ட பெண்ணை நான் மிச்சல் என்றே அழைத்துக்கொண்டிருக்கிறேன்:)
ReplyDeleteஇது கொஞ்சம் குழுப்பமான விடயம் தான்.Michael என்ற முதற் பெயர் ஆணுக்கு.Michaela பெண்ணுக்கு( ஒரு a கூட வருகிறது). மிச்சயலா அல்லது மிச்சேலா என்பார்கள்.
Deleteதிரு. விஜய், எனக்கும் இது மிகவும் ஆர்வத்தை தூண்டும் ஒரு தலைப்பு.
ReplyDeleteஇது பற்றிய நானறிந்த வேறு சில உரையாடல் / கருத்து / பதிவு சுட்டிகள் இங்கு :
http://www.giriblog.com/2012/04/funny-tamil-translation.html
http://en.wikipedia.org/wiki/Constructed_language
http://dondu.blogspot.com/2010/12/2.html
http://balaraman.wordpress.com/2012/12/31/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-2/
சில ட்விட்டர் துணுக்கிடுகைகள் : https://twitter.com/iKwayMusings
https://twitter.com/iKwayMusings/status/286437027401060352
https://twitter.com/ilavezhil/status/157029097665609728
https://twitter.com/iKwayMusings/status/286724028058726400
https://twitter.com/BalaramanL/status/288634795066548225
திரு. ராஜ நடராஜன்,
நீங்கள் கீழ்க்கண்ட வேறுபாட்டினை முன்னரே அறிந்திருக்க வாய்ப்புள்ளது,
Michael = மைக்கேல் (தமிழ்) = Mischel = மிஷெல் = மிஷ்ஷேல் / மிச்சேல் / மிஷ்செல் / மிச்ஷயேல் / மிச்ஷயீல் / மிஷ்ஷயேல் / மிஷ்ஷயீல் (according to the Nordic region) = மிக்கேல் / மிகயீல் (ரஷ்யன்) . மேலும் சில இடங்களில் Mikel / Mikael.
பழைய D D செய்தி வாசிப்புகளில் முன்னாள் ரஷ்ய அதிபர் மிக்கயீல் கோர்பச்சேவ் என்றே விளிக்கப்படுவார் ஆனால் ஆங்கில செய்திதாள்களில் Michael Korbachev என்றே எழுதப்பட்டிருக்கும். சரியான ஸ்பெல்லிங் Mikhail Korbachev ஆகும்.
காரணம் லத்தீன் எழுத்துக்கள் பார்ப்பதற்கு ஒரே வடிவத்தில் இருந்தாலும் உச்சரிப்பு மொழிக்கு மொழி வேறுபடும். எ கா : ஆங்கிலத்தில் E = ஈ அதே ஜெர்மனில் E = ஏ.
தாங்கள் ஆங்கிலத்திலிருந்து அந்த மொழிகளை படித்து புரிந்து கொள்ள / உச்சரிக்க கற்றுக்கொள்வதால் வரும் மயக்கம் அது.
அதாவது திரு. கே.ஜே யேசுதாஸ் / திரு. மம்முட்டி / திரு. ஜெயராம் முதலானோர் எவ்வளவு தமிழ் சுத்தமாக உச்சரித்தாலும் தாங்கள் அவர்களின் குரல் / உச்சரிப்பு முறையினை அவதானிக்க முடிவதற்கு காரணம் அதுவே.!!!
http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/
நன்றி iK Way!
Deleteஎதிர்பார்த்ததை விட சுவராசியமாக உள்ளது. ஒருமித்த முடிவு கிடைத்தால் சந்தோஷம்.
//ராஜ நடராஜன்January 9, 2013 4:23 PM
ReplyDeleteநான் என்ன சொல்கிறேனென்றால் முதலில் முடிந்தவரை தங்கிலீஷ் தவிர்ப்போம்.//
நண்பர் விஜய்,
நடந்து செல்லும் மக்களின் மன்னன் ராஜ நடராஜன் கருத்து மிக சரியானதே. இந்த தங்கிலீஷ் என்பது ரொம்ப அசிங்கமாயிருக்கு. தங்கிலீஷ்வை ஒரு ஆங்கில இனத்தவருக்கு போட்டு காட்டினால் நீங்க ஆங்கிலத்தை கொஞ்சம் பிழையாக பேசுகிறீர்கள் என்பார்கள்.
நண்பர் வேகநரி,
Deleteதங்கிலீஷ் தேவை இல்லை என்பதுதான் என்னுடைய கருத்தும் கூட. ஆனால் பெயர்ச்சொல்லை மொழி மாற்றம் செய்வது சரியாக படவில்லை. ராஜ நடராஜன் என்ற பெயரை ஒரு ஆங்கிலேயர் King WalkKing என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? மொழிபெயர்க்க முடிந்த பெயர்ச்சொற்களை மொழிபெயர்த்துக் கொள்கிறோம். பண்ண முடியாத பெயர்களை அப்படியே தானே உபயோகப்படுத்துகிறோம்? உதாரணம் "யாஹூ, கூகிள் ....".