Wednesday, January 19, 2011

நீங்களே கர்த்தர் சொன்னபடி நடந்துக்கல. அப்புறம் எப்படி நாங்க???

இது கிறிஸ்தவர்களுக்கு எதிரான பதிவு அல்ல.

சில வருடங்களுக்கு முன்னாள் நடந்த ஒரு சுவையான சம்பவம். நானும் என்னுடைய சித்தப்பாவும் ஒரு இடத்தில் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது கிறிஸ்தவத்தை பரப்புவதற்காக வந்த ஒருவர் எங்களிடம் துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்துவிட்டு கர்த்தரை நம்பினால் ஏற்படும் நன்மைகளை(?) விளக்கி சொல்லிக்கொண்டிருந்தார். இரண்டு பேருக்குமே அவர் பேச்சை கேட்பதில் துளியும் ஆர்வம் இல்லை. அது எங்கள் நடவடிக்கை மூலமாக அவருக்கு மறைமுகமாக உணர்த்தியும் அவர் விடாது தொடர்ந்துகொண்டே இருந்தார். பொறுமை இழந்த என் சித்தப்பா "என்னுடைய ஒரே ஒரு கேள்விக்கு விளக்கம் சொல்லுங்கள். நான் இப்பொழுதே உங்கள் மதத்தில் சேர்ந்து விடுகிறேன்" என்றார். "சரி கேளுங்கள்" என்றார் அவர். அவர்களுக்குள் நடந்த உரையாடல்:

"கிறிஸ்தவரான நீங்கள் கர்த்தர் விருப்பப்படி தான் நடந்துகொள்கிறீர்களா?

"ஆமாம்"

"உடலில் ஆடைகளே இல்லாமல் இருந்த ஆதாம் ஏவாள் ஆடைகள் அணிய ஆரம்பித்தது ஏன்?"

"கர்த்தர் உண்ணக்கூடாது என்று சொன்ன ஆப்பிளை சைத்தான் பேச்சைக் கேட்டு சாப்பிட்டதனால் கெட்ட எண்ணங்கள் (ஆடைகள் அணிவது உட்பட) வந்துவிட்டது. அதனால் அவர்கள் ஆடைகளை அணிய ஆரம்பித்தனர்."

"அப்படியானால் கர்த்தரின் விருப்பம் நாமெல்லாம் ஆடைகள் அணியக்கூடாது என்றுதானே அர்த்தம். அது தெரிந்தும் நீங்கள் ஏன் அவர் விருப்பத்திற்கு மாறாக ஆடைகள் அணிந்திருக்கிறீர்கள்?"

இந்தக் கேள்விக்கு பதில் சொல்லத்தெரியாத அந்த நபர் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடிவிட்டார். நாங்களும் நிம்மதி அடைந்தோம். இதைப்படிக்கும் உங்களில் யாருக்காவது இதுமாதிரி ஒரு நிலைமை வந்தால் இந்த கேள்வியை கேட்டு தப்பித்துக்கொள்ளுங்கள்.

23 comments:

  1. பதிவுலக நண்பர்களே..
    அருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
    நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
    http://sakthistudycentre.blogspot.com/

    ReplyDelete
  2. வோட்டு போடர Button சேருங்க நண்பரே..
    Indli வெப்க்கு போய் ஓட்டு போடரதா இருக்கு..

    ReplyDelete
  3. நல்ல அனுபவம்..

    கமெண்ட் word verification எடுத்து விடவும்...


    --
    மதுரை பாண்டி
    http://maduraipandi1984.blogspot.com

    ReplyDelete
  4. எப்பா.........இந்த புள்ளைங்க எல்லாம் என்னா போடு போடுதுங்க ? இந்த மாதிரி நாலு பேரு கேக்க ஆரம்பிச்சா மதத்தையும், ஜாதியையும் வைத்து பொழைக்கும் கூட்டம் காணாமல் போய்டும்.
    நல்ல பதிவு.

    ReplyDelete
  5. @Madurai pandi: நன்றி. Word verification disable பண்ணிட்டேன்.

    ReplyDelete
  6. @கக்கு - மாணிக்கம்: நன்றி நண்பரே

    ReplyDelete
  7. உலகின் முதன் மனிதர்களாக உண்டான ஆதாம் மற்றும் ஏவாள்க்கு பிறந்த பிள்ளைகளுக்குள் திருமணம் நடை பெற்று இருந்தால் மட்டுமே அடுத்த தலை முறை உண்டாகி இருக்கும் அல்லவா... இப்படியும் கேள்விகள் கேட்கலாம் அல்லவா..

    ReplyDelete
  8. hi friend,
    i already read this type of comments through osho books, any way thanks for your post

    ReplyDelete
  9. நண்பரே வாதத்துக்கு மருந்திடலாம்,விதண்டாவாதத்துக்கு மருந்தில்லை,என்பர்;

    இன்னும் ஆயிரத்தெட்டு பெரியார் வந்தாலும் உங்களை மதம் மாத்தவே முடியாது;

    நீங்களெல்லாம் உங்கள் தெய்வங்கள் சொல்லிக்கொடுப்பது போல நடந்துகொள்வது குறித்து அதிக மகிழ்ச்சி..!

    அதான் ஆத்தா முன்னாடி வேப்பிலை கட்டி ஆடி உங்கள் நிர்வாணத் தன்மையை வெளிப்படுத்துகிறீர்களே..!

    இன்னும் சொல்லணுமா..? வேண்டாம் நிறுத்திடுங்க‌..!

    ReplyDelete
  10. Arumaiyana pathivu.
    Please put more information like this.

    ReplyDelete
  11. என்னம்மா யோசிக்கிறீர்கள்?

    வித்யாசமான அணுகுமுறை

    ReplyDelete
  12. @chillsam: பெரியாரைப் பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை. என்னுடைய கேள்வி இதுதான். எதற்காக மதம் மாற்றுகிறீர்கள்? நாங்கள் எதையோ எப்படியோ கும்பிட்டுவிட்டுப்போகிறோம். அதனால் உங்களுக்கு என்ன பிரச்சினை? இயேசுதான் உண்மையான கடவுள் என்றால் உலகில் உள்ள எல்லா மதத்தினரையும் மாற்றலாமே. அதை விட்டுவிட்டு இந்துக்களை (இந்து என்ற ஒரு மதமே கிடையாது என்பதும் தெரியும்) மட்டும் மாற்ற முயற்சிப்பது ஏன்?

    ReplyDelete
  13. //பெரியாரைப் பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை. என்னுடைய கேள்வி இதுதான். எதற்காக மதம் மாற்றுகிறீர்கள்? நாங்கள் எதையோ எப்படியோ கும்பிட்டுவிட்டுப்போகிறோம். அதனால் உங்களுக்கு என்ன பிரச்சினை?//

    இந்துயிசத்திலுள்ள எண்ணற்ற ஓட்டைகளையெல்லாம் விட்டு விட்டு ஒழுங்கான மனுக்குல வரலாற்றையுடைய பைபிளை மிதித்து நீங்கள் உங்கள் உயர்த்திக்கொள்ள முயற்சிக்கவேண்டாமே;

    பாரதியைப் போல பாரதிதாசனைப் போல அல்லது பெரியாரைப் போல இந்த சமுதாயத்திலுள்ள அவலங்களை எதிர்த்துப் போராடுங்கள் என்கிறேன்;

    என்னைப் பொறுத்தவரையிலும் மதம் என்ற வார்த்தையையே குறிப்பிடுவதைத் தவிர்க்கிறேன்;

    எனவே கிறித்தவர்கள் மதம் மாற்றுகிறார்கள் என்பதே முதல் தவறு;தவறான ஒரு பாதையில் சென்று கொண்டிருப்போரை நேரான பாதைக்கு அழைப்பது தவறல்ல; பாதை மாற விருப்பமில்லாவிட்டால் அவரவர் வழியில் செல்வதில் எந்த பிரச்சினையுமில்லை;இதற்கு உங்கள் பாட்டியே நல்லதொரு சான்று..!

    நீங்களும் கூட ஒரு அலுவலகத்தில் பணிபுரிகிறீர்கள்;இங்கே உங்கள் வேலைக்கு தகுந்த சம்பளம் கிடைக்கவில்லை என்றால் உங்கள் நண்பர் வேறு கம்பெனிக்கு அழைக்கமாட்டாரா? அப்படியே மாறிக்கொண்டே இருந்தாலும் சரி மாறாமலிருந்தாலும் சரி அதன் பாதிப்பு கம்பெனிக்கல்ல,தனிப்பட்ட உங்களுக்கே.

    ReplyDelete
  14. எங்கள் மதத்தில் உள்ள ஓட்டைகளை நாங்களே அடைத்துக்கொள்வோம். அதைப்பற்றி நீங்கள் கவலை கொள்ள தேவை இல்லை.

    என்னை போராட சொல்லிவிட்டு நீங்கள் ஏன் கிறிஸ்தவம் என்ற போர்வைக்குள் சென்று ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் ஏன் போராடவில்லை?

    உங்களைப்பொருத்தவரை மதமும் கம்பெனியும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் இது எங்கள் வாழ்க்கை முறை.

    உங்கள் வாதப்படியே எடுத்துக்கொண்டால் கூட சரியான சம்பளம் கொடுக்காத கம்பெனியிலிருந்து வெளியேற சொல்கிறீர்கள். எங்களுக்கு இங்கு தேவையான அளவு சம்பளம் கிடைக்கிறது. நான் ஏன் வெளியேற வேண்டும்?

    நான் செல்லும் வழிதான் சரியானது என்று சொல்வது அடாவடியானது.

    ReplyDelete
    Replies
    1. மச்சி! கிருத்துவ மதம் ஒரு கம்பெனி என்று ஒத்துக்கொண்ட chillsamமை நீங்கள் பாராட்டியே ஆகவேண்டும்.

      Delete
  15. ஆதாம் ஏவாள் உடை இல்லாம்ல் இருந்ததுக்கு காரணம் அவர்கள் அறிவு கண்கள் திறக்க படவில்லை.ம்னிதன், தான் நிருவாணியாய் இருப்பதை அறியாதிருந்தான். க்டவுள் திங்க வேண்டாம் எண்று கூறியா கனியயை தின்றதால் அவர்கள்
    அறிவு க்ண்கள் திறக்கபட்டது அப்பொது அவர்கள் அவ்ர்கள் நிருவாணமாய் இருப்பதை உணர்ந்தார்கள் அதன் பிறகு கடவுள் அவர்கலுக்கு தோல் உடை அணிவித்தார். இப்படி இருக்குமம்போது கட்வுள் ஆடை அணிய வேண்டாம் என்று எங்கும் கூறவில்லை.

    ReplyDelete
  16. "அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.

    அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.

    பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.

    அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்.

    அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்.

    அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார்." (Gen 3:6 -11)

    இதுவே நிர்வாணம் சம்பந்தமான வேதப் பகுதி;முதலில் ஒரு காரியம்,பைபிள் மாத்திரமே இந்த உலகின் சிருஷ்டிப்புக்கு ஒரே எழுதப்பட்ட வரலாற்றைத் தெரிவிக்கும் ஆதாரம்;அது தவறாக இருக்கிறது என்று சொல்லியே ஆதாரம் தேடி விஞ்ஞானம் வளர்ந்தது தனி கதை;ஆனால் இதுபோன்ற எந்தவித சமதளப் பார்வையும் இல்லாத மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் பைபிளைக் குறைகூறுவதும் அதனை அந்நியமாகப் பார்ப்பது மனுக்குலத்தின் சாபம்; பெற்ற தாயைப் பார்த்து ஓடும் அறிவில்லாத குழந்தையைப் போலவே என்னுடைய சமுதாயம் இருக்கிறது.

    ஞானம் தேடி கேள்வி எழுப்பியபோதெல்லாம் கட்டுக்கதைகளையே சொல்லி அடிமைப்படுத்தி வைத்தது இந்துத்வா மிருகம்;ஆனால் வேதமாகிய வெளிச்சம் எழும்பிய பிறகே இந்த உலகில் இன்றைக்கு இருக்கும் அத்தனை நன்மைகளும் பிறந்தது;டார்வின் முதலாக மனிதன் ஞானத்தைத் தேட காரணியாக இருந்தது வேதப்புத்தகமே;அவ்வளவு ஏன் குரான் போன்ற உலகளாவிய மார்க்கத்தின் ஆதாரமாக விளங்குவதும் வேதப்புத்தகம் தான்;முகமது நபி அவர்கள் தன் காலத்தில் இருந்த அனைத்து நம்பிக்கைகளையும் ஒருங்கிணைத்தே இஸ்லாமை தோற்றுவித்தார்;அதில் ஒரு சதவீதம் கூட தற்கால இந்துத்வா தாக்கம் இல்லாததையும் கவனித்தல் வேண்டும்.

    உலகில் மனுக்குலமே இராதிருந்த போது இருந்த ஆதாம் ஏவாள் ஆகிய இரண்டு பேருக்குள் நிர்வாணத்தை உணரச் செய்த மாயையே சிருஷ்டிப்பின் எதிரி;அதுவே உங்களையும் என்னையும் மோதவிட்டுக்க் கொண்டிருக்கிறது.தாம் கற்றுத் தராத ஒரு புதிய மொழியில் தாம் படைத்த முதல் மனிதனாகிய ஆதாம் பேசியபோது கடவுள் ஆச்சர்யத்துடன் "நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ" என்று கேட்கிறார்;அவர் அவனை நிர்வாணியாகப் படைத்திருந்தாலும் அவனைத் தமது ஜோதிப் பிரகாச ஒளியால் மூடிவைத்திருந்தார்;அதன்பிறகே அவன் நிர்வாணத்தை உணர்ந்தான்;ஆனால் இந்துத்வா புலிகளுக்கு நிர்வாண நிலையே உன்னத நிலையாம்..!

    ReplyDelete
  17. என்னுடைய பதிவின் நோக்கம் பொய்யையும் புரட்டையும் சொல்லி ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்தை பிரிக்கும் கயவர்களிடமிருந்து தப்பிப்பது எப்படி என்பதுதான். எந்த மதம் உயர்ந்த மதம் எந்த கடவுள் உண்மையான கடவுள் என்ற வாதமே அபத்தமானது. எங்கள் மதத்தில் ஆயிரம் ஓட்டைகள் உள்ளன. இல்லை என்று மறுக்கவில்லை. உங்கள் மதத்தில் ஓட்டைகளே இல்லை என்று அடித்துக் கூற முடியுமா? உங்கள் மதத்தில் உள்ள ஒரு உலக மகா ஓட்டையை ஆதாரத்துடன் நிரூபித்துவிட்டால் உங்கள் மதத்தை விட்டு வெளியேறத் தயாரா?

    ReplyDelete
  18. @johnny: தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  19. All the religious book are originally same origin, our ancients understand it in different way, and re-write it in follower changed it as they wanna. Finally now we are talking it as different religion. All the religions are making a happy life to each one of us.. do don't take seriously just try to happily.. without disturbing each others..

    ReplyDelete
  20. ஒரு மனிதன் எந்த மதத்தை வழிபட வேண்டும் என்பது அவனோட தனிப்பட்ட உரிமை, அதில் போய் நீ வழிபடும் மார்க்கம் சரி இல்லை என்று சொல்லிக்கொண்டு, மதம் மாற்ற முயற்சிப்பது மிக மிக தவறான செயல். அது அடுத்தவன் சுதந்திரத்தில் தலையிடுவது. எனவே இப்படி மதம் மாற்றுகிறேன் பேர்வழி என்று எவனாவது வீட்டு கதவை தட்டினால் அத்து மீறி என் எல்கைக்குள் நுழைகிறான் என்று வழக்கு தொடர வேண்டும். நீங்கள் இந்த இடுகையில் முதல் வரியில் இது யாரையும் புன்ன்படுதுவதற்கு இல்லை என்று கூறிய பிறகும், இந்த பின்னூட்ட வாதங்கள் இப்படி போகிறது என்றால் இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் மதவெறி பிடித்தவர்கள் யார் என்று. இந்து மதம் என்பது மிகப்பெரிய விருட்சம், இதை எந்த தீயசக்தியாலும் அழிக்க முடியாது. காய்த்த மரம்தான் கல்லடி படும். அதனால் கத்துபவர்கள் கத்தட்டும். இந்துக்களாகிய நாம் இந்து என்று சொல்லி தலை நிமிர்ந்து நிற்போம். ஜெய் ராம்.

    ReplyDelete

பிரபல (?) பதிவுகள்