சமீபத்தில் பார்த்து எரிச்சல் அடைந்த ஒரு தொலைகாட்சி விளம்பரம்.
விமானத்தினுள் இருந்த பயணிகள் லேசாக குலுங்கி பின் சமநிலைக்கு வருவதிலிருந்து விமானம் தரை இறங்கிவிட்டது என்பது புரிகிறது.
புது தில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. விமானம் நிற்கும்வரை சீட் பெல்ட்டை அணிந்தே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அறிவிப்பு முடியும்முன் அனைவரும் சீட் பெல்ட்டை அவிழ்த்து விட்டு எழுந்திருக்கின்றனர்.
தங்கள் உடைமைகளை மேலிருந்து இறக்கும்பொழுது கவனமாக இறக்கவும்.
ஒருவர் மேலிருந்து தன்னுடைய உடைமைகளை எடுக்கும்போது அவர் பெட்டி சீட்டில் அமர்ந்திருக்கும் இன்னொருவர் மேல் பொத்தென்று விழுகிறது.
தயவு செய்து செல்போன் உபயோகிக்காதீர்கள்.
ஏதேதோ ரிங்டன் சப்தங்களும் போனில் பேசிக்கொள்ளும் சப்தங்களும் கேட்கின்றது.
அனைவரும் அவரவர் இடத்திலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
விமானம் நிற்பதற்குள் அனைவரும் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறுவதற்குத் தயாராக கதவின் அருகில் முண்டியடித்துக்கொண்டு நிற்கின்றனர்.
காட்சி முடிந்தது.
பின்னணியில் ஒரு குரல்: நம்முடைய இந்த அவசரமான வாழ்க்கையில் நமக்குத் தேவை அதிவேக இன்டர்நெட் கனெக்க்ஷன். அதனால் வாங்குவீர் __________ DATA CARD.
இந்த விளம்பரத்தில் அதிவேக இன்டர்நெட் தேவைக்கும் காட்சிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முழுக்க முழுக்க இந்தியர்களைப் பற்றி கேவலமாகக் காட்டிவிட்டு எங்க இன்டர்நெட் கனெக்க்ஷன வாங்கிக்கோங்க அப்படின்னு சொல்றான். நமக்குத்தான் நம்மள நாமளே தாழ்த்திக்கொள்வது ரொம்பப் பிடிக்குமே. அதனால அதப் பார்த்து ரசிச்சுட்டு போயிட்டே இருப்போம்.