Thursday, January 20, 2011

யார் நன்மைக்காக இந்த மதமாற்றம்?

"டேய் விச... உங்க அம்மா நம்மளையெல்லாம் விட்டுட்டு போய்ட்டாடா...."

தெருவில் விளையாடிக்கொண்டிருந்த நான் என் பாட்டியின் (அம்மாவோட அம்மா) அலறல் சத்தம் கேட்டு ஒருவித பயத்துடன் வீட்டுக்குள் சென்றேன். உள்ளே படுத்திருந்த என் அம்மாவை சுற்றி ஒன்றிரண்டு பேர் அழுது கொண்டிருந்தனர். எனக்கு அப்போது ஏழு வயது. விளையாட்டைத் தவிர வேறெதுவும் அறியாதவன். நடப்பது ஒன்றும் புரியாமல் வெளியே வந்து கோட்டைச்சுவர் மீது ஏறி அமர்ந்து கொண்டேன். வீட்டுக்குள் ஜனங்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். நேரம் செல்லச் செல்ல அழுகைச் சத்தம் அதிகமாகிக்கொண்டே போனது. காரணமே தெரியாமல் நானும் அழுது கொண்டிருந்தேன்.

அம்மா எங்கே சென்றாலும் அவங்க சேலையைப் பிடித்துக்கொண்டே நானும் செல்வேன். இருந்தாலும்  என் அம்மாவின் பிரிவு எவ்வளவு பெரிய இழப்பு என்று எனக்கு அந்த வயதில் தெரிந்திருக்கவில்லை. ஆனால் என் பாட்டிக்கோ அது ஒரு தாங்க முடியாத சோகம். என்னை பார்க்கும்போதெல்லாம் என் பாட்டி அழுதுவிடுவார்கள். நான் பெரியவனான பிறகும் இது தொடர்ந்தது. பத்தாவது படிக்கும் வரை நான் என் பாட்டி வீட்டில்தான் வளர்ந்தேன்.

அம்மா இறந்து ஒரு மாதம் ஆகியிருந்த நேரத்தில் பால்க்காரம்மா என்று அழைக்கப்படும் என் பாட்டியின் தோழி ஒருவர் என் பாட்டியை மூளைச்சலவை செய்ய ஆரம்பித்தார். இந்துச்சாமியைக் கும்பிட்டதாலதான் எங்க பாட்டிக்கு இப்படி ஒரு நிலைமை என்றும்  கர்த்தரை   நம்பியிருந்தால் இப்படி நடந்திருக்காது என்றும் தொடர்ந்து சொல்லி வந்தார். இயல்பாகவே இளகிய மனதுடைய என் பாட்டியும் இனிமேலும் இதுமாதிரி துன்பம் வந்துவிடக்கூடாது என்று எண்ணி வேதத்தில் இனைந்து விட்டார். சமயம் கிடைக்கும்போதெல்லாம் என்னையும் சேரச்சொல்லி நச்சரித்துக்கொண்டே இருப்பார்.

சில வருடங்களுக்குப் பின் அந்த பால்க்காரம்மாவின் திருமணமாகாத ஒரே மகன் நூறாண்டுகளுக்கு ஒருமுறை எங்கள் ஊர் ஆற்றில் வரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்துவிட்டார். 

இவ்வளவு நாளும் என் பாட்டி என்னை வற்புறுத்திய போதெல்லாம் பதில் சொல்லாமல் எஸ்கேப் ஆகிவிடுவேன். இப்பொழுது என் பாட்டிக்கு சொல்ல நல்ல பதில் கிடைத்துவிட்டது. என் பாட்டி இட்லிக்கு போடும் போதெல்லாம் நான்தான் ஆட்டு உரலில் மாவு ஆட்டிக்கொடுப்பேன். என் பாட்டி மாவை தள்ளி விடுவார்கள். ஒரு நாள் அப்படி ஆட்டிக்கொண்டிருக்கும்போது

"டேய் விச... கர்ததர நம்புடா."

"வேண்டாம் வேண்டாம். நான் இந்துச்சாமியையே கும்பிட்டுக்கறேன்.."

"இந்துச்சாமிதான  உங்க அம்மாவ நம்மகிட்டருந்து பறிச்சிருச்சி. கர்த்தர்தாண்டா  உண்மையான கடவுள்.

"ம்ம்ம் அப்படின்னு யார் சொன்னா?"

"பால்க்காரம்மாதான் சொல்லுச்சி"

"அப்படின்னா பால்க்காரம்மாவோட மகன ஆத்து வெள்ளம் அடிச்சுட்டு போகும்போது அவர ஏன் கர்த்தர் காப்பாத்தல?

"அவர கர்த்தர் அழைச்சுக்கிட்டாரு."

"கர்த்தர் அழைச்சுகிட்டா அது சரி. நம்ம சாமி அழைச்சுக்கிட்டா அது தப்பா?"

அன்றிலிருந்து என் பாட்டி என்னை மதம் மாற்ற முயற்சிப்பதில்லை. என்ன காரணமோ தெரியவில்லை. கொஞ்ச நாளில் என் பாட்டி மறுபடியும் இந்துவாக மாறிவிட்டார்கள்.

அந்த பால்க்காரம்மாவின் டார்கெட்டில் (ஏ)மாற்றப்பட்டது என் அத்தையும் ஒருவர். என் அத்தையின் ஒரு பிரச்சினைக்கு காரணம் இந்துச்சாமிதான் என்று நம்பவைத்து அவர்களையும் கிறிஸ்தவராக மாற்றி விட்டார்கள். என்ன காரணத்துக்காக என் அத்தை மதம் மாறினார்களோ அது இருபது வருடங்கள் ஆகியும் இன்றுவரை நிறைவேறவே இல்லை. உண்மையை சொல்லப்போனால் முன்பிருந்ததை விட இப்பொழுது நிலைமை மோசமாகத்தான் உள்ளது. என் பாட்டி போலல்லாமல் என் அத்தை இன்னும் கிறிஸ்தவராகவே இருக்கிறார். அவர்கள் மதம் மாறியதால் நல்லது நடந்ததோ இல்லையோ குடும்பத்தினுள் நிறைய மதம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் குழப்பங்களும் தான் தொடர்ந்துகொண்டிருக்கிறன. எல்லோரிடமும் பாசத்துடன் பழகிக்கொண்டிருந்த என் அத்தை இப்பொழுது எல்லோருக்கும் அந்நியமாகத் தெரிகிறார். அவர்களால் எங்களுடன் ஒட்டமுடியவில்லை. எங்களாலும் அவர்களுடன் ஒட்டமுடியவில்லை. 

மதம் மாற்றும் அன்பர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். மாற்ற வேண்டும் என்று முடிவு பண்ணிவிட்டீர்கள் என்றால் ஒரு குடும்பம் முழுவதையும் மாற்றிவிடுங்கள். கர்த்தர் உங்களை இரட்சிப்பாராக!

12 comments:

  1. முதல் கருத்துரையும் , முதல் ஓட்டும் நான்தான்..

    சரியான நேரத்தில்..சரியான,அழுத்தமான பதிவு...

    http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_20.htm
    இதையும் படித்து வழங்கவும்.

    ReplyDelete
  2. மறுபடியும் நினைவுபடுத்துகிறேன்.
    வோட்டு போடர Button சேருங்க நண்பரே..
    Indli வெப்க்கு போய் ஓட்டு போடரதா இருக்கு..

    அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

    ReplyDelete
  3. நன்றி கருண். நேற்றிலிருந்து அதைத்தான் முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு பதிவுக்கு கீழும் இன்ட்லி வோட் லிங்க் எப்படி வரவழைப்பது?

    ReplyDelete
  4. இன்ட்லி website -க்கு போய் பாருங்க அதிலேயே விரிவா போட்டிருக்காங்க..முடிந்தவரை எல்லா பிளாக்கு போய் comment குடுங்க.. ஓட்டுபோடுங்க.. சீக்கிரம் பிரபலம் ஆயிடலாம்.
    http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_20.html

    ReplyDelete
  5. பிளாக்கருக்கான இன்ட்லி ஓட்டளிப்பு பட்டை.
    http://ta.indli.com/static/add-indli-voting-widget-blogger-tamil

    ReplyDelete
  6. When these people are going to stop brainwashing people for the sake of foreign money.

    ReplyDelete
  7. சரியான நேரத்தில்..சரியான,அழுத்தமான பதிவு...:))

    ReplyDelete
  8. தங்களின் முந்தைய பதிவே Super

    இது ஆதாரத்துடன் மேலும் மெருகுஊட்டியுள்ளது.

    Indli யில் வாக்களித்துள்ளேன்.

    ReplyDelete
  9. படிப்பறிவில்லாத பாட்டி வேண்டுமானால் மரணத்தைக் குறித்து தவறாக நினைத்து அதற்காக மதம் மாறியிருக்கலாம்;நன்கு படித்த நண்பர்கள் நேர்மையுடன் சிந்திக்கட்டும்;ஏனெனில் மரணமே ஞானத்தின் பிறப்பிடம் என்பது மார்க்கங்களின் வரலாறு ஆகும்;

    தன் மகளைப் பறிகொடுத்த துக்கத்தில் முதலில் தான் வணங்கிய இந்து விக்ரஹங்களை வெறுத்து கிறித்தவ மார்க்கத்துக்கு மதம் மாறியதும் பிறகு சமுதாயத்தில் தனிமைப்படுத்தப்பட்ட உணர்வினால் மீண்டும் இந்து மத‌த்துக்கே மாறியது சரி பாட்டியின் நிலையற்ற மனநிலையையே குறிக்கிறது;அதனை பெரிய குறையாகச் சொல்லமுடியாது;

    எந்த தெய்வமுமே மரணத்துக்கு எதிராக செய்யாத ஒரு காரியத்தை இயேசு மட்டுமே செய்திருக்கிறார் என்பதே கிறித்தவ மார்க்கத்தின் ஆணி வேராகும்;ஏனெனில் அவரே உயிர்களை சிருஷ்டித்தவர்.

    ஒரு உயிரை அதன் உரிமையாளர் அழைத்துக்கொண்டார் என்பதற்கும் ஒரு திருடன் ஒரு உயிரை கொள்ளை கொண்டு போய்விட்டான் என்பதற்கும் பல வித்தியாசங்கள் உண்டு.

    ReplyDelete
  10. @chillsam:: எந்தக் கடவுள் உண்மையான கடவுள் என்று வாதம் பண்ணுவது என்னுடைய நோக்கம் அல்ல. எல்லா மதமும் அன்பைத்தான் போதிக்கிறது. நல்லவர்களும் அயோக்கியர்களும் எல்லா மதங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார்கள். மதமாற்றத்தினால் என் குடும்பம் அடைந்த பாதிப்பை மற்றவர்களுடன் பகிர்ந்துள்ளேன். புரிதலுக்கு நன்றி.

    ReplyDelete
  11. //மதமாற்றத்தினால் என் குடும்பம் அடைந்த பாதிப்பை மற்றவர்களுடன் பகிர்ந்துள்ளேன். //

    மதமாற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்பு என்று எதை சொல்லுகிறீர்கள்,நண்பரே?

    உங்கள் தாயார் மரித்துப்போகவோ பால்காரம்மாவுடைய மகன் மரித்துப்போகவோ காரணத்தைத் தேடியதே எல்லா குழப்பத்துக்கும் காரணம்;

    வெய்யில் காலம் வருகிறது... நிழலைத் தேடி, குளிர்பானத்தைத் தேடி மனிதர்கள் ஓடுவார்கள்;

    அதுபோலவே "இக்கரைக்குப் பச்சை" என்ற ரீதியில் மனிதர்கள் இங்குமங்கும் ஓடுகிறார்கள்;

    இந்த ஓட்டத்தில் யாருமே விதிவிலக்கல்ல;தன் வீட்டுக்குள்ளேயே ஓடினால் பிரச்சினையாகிறதில்லை;ஆனால் அடுத்த வீட்டுக்கு ஓடினால் மட்டும் பிரச்சினையாகிறது..!

    ReplyDelete
  12. நல்ல பதிவு!!
    --
    மதுரை பாண்டி
    http://maduraipandi1984.blogspot.com

    ReplyDelete

பிரபல (?) பதிவுகள்